தூணற்ற
பெருங்ககனம், நிகரற்ற இறை வசனம் அழகுற்ற மானுடர் வதனம். ஆண்டவன்.
அருளெனத்தகும் மலர்தர்தனில் அமிர்தம். மழைதனில் துமிதம், மாலைதனில்
தென்றலின் இதம் அல்லாஹ்வின் அற்புதம் விசும்பிடை வளர் மதி. பசுந்தரை இடை
குளிர் நதி, அண்டத்தில் புவியின் கதி, எல்லாம் இறைவன்விதி கருவறையின்
குழந்தை பிறப்பு, மண்ணறையில் மனிதன் மரிப்பு. கண்ணில் கட்புலனாகும் உணர்௨
இது கிரகம் ஆளும் கட௨ள் சிறப்பு,
(ககனம்-வானம்)
மன்னாரமுது (அஹ்னப்)
Tuesday, July 23, 2013
அன்னை
ஐயிரண்டு
திங்கள் பைய நடந்து ஐயம் கொண்டுமெய்யெனது காக்க பத்தியம்
கலங்காது தவம் கிடந்தவளே! நித்தியமாய் இறைவன் மேல் சத்தியமாய்
சொல்கிறேன் அன்னை என்றால் விண்ணையும் விலைக்கு வாங்கி கொடுப்பேன்.
அளவற்ற ஆழி அடங்கா ஒசையில்அழுவது தன் தாய் கடலை காணாத ஆசையால்தான்.
பெண்ணுள்ளம்
திங்கள்
முகத்தழகி, பிறை நுதல் நெற்றியழகி, கான் கூந்தழகி, கயல் கண்ணழகி,
செவ்வரத்தை செவ்விதளழகி, பஞ்ஞுத்தாளழகி, இத்தனை உவமை உன்னை உவமித்தும் உன்
உள்ளமென்ன உருகாத வார்ப்பிரும்பா? அடியே! வேகாத வேர்க்கிழங்கா?
(திங்கள்-நில௨, நுதல்-நெற்றி, கான்-காடு, இதள்-உதடு, தாள்-பாதம்)
(திங்கள்-நில௨, நுதல்-நெற்றி, கான்-காடு, இதள்-உதடு, தாள்-பாதம்)
உவமையின் வகைகள்
1.விரியுவமை
2.தொகையுவமை
3.இதரவிதரவுவமை
4.சமுச்சயவுவமை
5.உண்மையுவமை
6.மறுபொருளுவமை
7.புகழுமை
8.நிந்தையுவமை
9.நியமவுவமை
10.அநியவுவமை
11.ஐய உவமை
12.தெரிதருதேற்ற உவமை
13.இன்சொல் உவமை
14.விபரீத உவமை
15.இயம்புதல் வேட்கை உவமை
16.பல பொருளுவமை
17.விகார உவமை
18.மோக உவமை
19.ஆழ்ந்த உவமை
20.பலவையிற்போலி உவமை
21.ஒருவையிற்போலி உவமை
22.கூடா உவமை
23.பொது நீங்குவமை
24.மாலையுவமை (தண்டியலங்காரம்)
2.தொகையுவமை
3.இதரவிதரவுவமை
4.சமுச்சயவுவமை
5.உண்மையுவமை
6.மறுபொருளுவமை
7.புகழுமை
8.நிந்தையுவமை
9.நியமவுவமை
10.அநியவுவமை
11.ஐய உவமை
12.தெரிதருதேற்ற உவமை
13.இன்சொல் உவமை
14.விபரீத உவமை
15.இயம்புதல் வேட்கை உவமை
16.பல பொருளுவமை
17.விகார உவமை
18.மோக உவமை
19.ஆழ்ந்த உவமை
20.பலவையிற்போலி உவமை
21.ஒருவையிற்போலி உவமை
22.கூடா உவமை
23.பொது நீங்குவமை
24.மாலையுவமை (தண்டியலங்காரம்)
Subscribe to:
Posts (Atom)